Tuesday 2 November 2010

பதிகம் 132

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.




உரை ( செந்தில்வேல்)(Senthilvel's interpretation)உரைப்பார் காத்து இருக்கவும்




உரை (ஜோ விநிப்றேத் )(joe's interpretation)உரைப்பார் காத்து இருக்கவும்




உரை (சௌமியா) (Somiya's Interpretation)உரைப்பார் காத்து இருக்கவும்




உரை (அரவிந்தன்) (Aravinthan's Interpretation)
பதிகம் 131 பெற்ற பேரின் சிறப்பை இங்கே விளக்கி உள்ளார் திர்ய்மூலர்.
Poem 131 ends by connoting on the great siddhis and the state the siddhis would take them. The top most siddhi is to go to shiva's loga the Ethereal Kailash.

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெருநெறி - தலை சிறந்த நெறி, பெரும் நெறி,

இந்த தலை சிறந்த நெறியை ( சிவ நெறியை)அடைவார்கள், அந்நெறியானது பிரியாது இருக்கும், எவ்வாறு ஒரு மிதிவண்டியை ஓட்டத்தெரிந்தவர், அவர் அறிந்த சமநிலையினை மறக்க (பிரிய) மாட்டார்களோ அவ்வாறே இந்நெறியையும் உணர்தபின் மறக்க இயலாது.
Once you attain these Siddhis, it would not leave you or you can not loose it, just like once you learn how to balance and drive a bi-cycle, even after 10years break, if you want to ride a bi-cycle, the first learning is remembered and you would instantly remember how to balance it, similarly, the Siddis would stick to you even in different births.

இந்த நெறியை உணர்தவர்களால் பிறவா பேரை அடைவர்.
Once you attain the the Siva's grace you would not get rebirth. You would attain salvation. Or even if you get reborn you would remember all that you have learnt in your previous birth its not that you need to learn again :)

என் நேரமும் அந்நிலையை (அம்மன்றில்) பிரியாத பெரும் பெறுவார்கள் .
You can get to that state any time you want. And be there in the state.

இவ்வாறு சமாதி நிலை அடைந்தவர்கள் இவுலகில் வாழும் மனிதனின் சிறுமையான உலகியல் சம்மதமான வழக்கில் உரையாட மாட்டார்கள்/
வாழ மாட்டார்கள்.

Thos who learned the sidhis, would stop engaging this world as a normal materialistic man would do.

நமசிவாய!!
Nama Shivaya!!

Thursday 28 October 2010

பதிகம் 131 (Poem 131 - First Tantram- Thirumanthiram)

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

உரை ( செந்தில்வேல்) உரைப்பார் காத்து இருக்கவும்

உரை (ஜோ விநிப்றேத் ) உரைப்பார் காத்து இருக்கவும்

உரை (சௌமியா) உரைப்பார் காத்து இருக்கவும்

உரை (அரவிந்தன்) (Aravinthan's Interpretation)
மாணிக்கம் - தலை சிறந்த இடம் , [Epitome, place where highest Kundalini exists (two feet above head)]
மாடம் - இடம் [Place]
ஆணி - (ஆணியாயுலகுக் கெல்லாம்) ஆதாரம் , மெய்பொருள் [God,the one who keeps things intact]


குண்டலினியின் இறுதி சக்கரத்தில் (மாணிக்கத் துள்ளே) ஜோதியாய் இருப்பவன் சிவன். இந்த தலைசிறந்த இடத்தில திரு கூற்றினை (யோகத்தை அடைந்தவருக்கு ) விரும்பி வழிபடுபவருக்கு (பின்பற்றுபவருக்கு ) அடையும் சித்திகளை விளக்க இயலாது.

The one who masters and keep practising the kundalini yoga would attain siddhis; The experience and the sidhis are beyond explanation.

Wednesday 27 October 2010

பதிகம் 130

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா ருட்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்



உரை (செந்தில்வேல்)
நாம் இன்று அறிவு என்று கூறுவது நம் ஐய்ம்புலன்களால் நாம் உணர்தவையும் மற்றவர்கள் நமக்கு உணனர்துயவையும் ஆகும். அனால் இந்த அறிவால் சிவனை காணும் பேரு கிட்டபோவதில்லை. ஆனாலும் இந்த சிட்ட்றறிவு கொண்டவர்களையும் தன்னை காணும் படி செய்ய அருள் புரிபவன் , உமையவள் காண நடனம் ஆடிடும் , மாணிக்கம் போன்ற ஒளி பொருந்திய சிவனே ஆகும்.

உமையவள் என்பவள் இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை அளிப்பவள். அவளுக்குகாக நடனம் புரிந்திடும் சிவன் உலக அறிவு மட்டுமே கொண்ட மாநிடர்க்களும்மும் அருள் புரிவான் என்ற உவமை இங்கு வெளிப்படுகின்றது.



உரை(ஜோ விநிப்றேத்) உரைப்பார் - காத்திருக்கவும்



உரை( சௌமியா) உரைப்பார் - காத்திருக்கவும்



உரை(அரவிந்தன்)
மனிதனின் அறிவின் திறன் எல்லைக்கு உட்பட்டது, அதை கருவியாக கொண்டு உண்மையை உணர இயலாது. எனினும் இறைவன் உண்மையை மனிதனின் அறிவுக்கு அறியும் படி உணர செய்வான்.


ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்

மேற்காணும் இறுதி இரண்டு அடிகளில் திருமூலர் குண்டலினி சக்தியை குறிபிடுகிறார். சக்தி எனும் குண்டலினி மூலாதாரத்திலிருந்து சிவமாகிய அக்கியைகு சென்று சேருவதை விளக்கி உள்ளார்.





Tuesday 26 October 2010

பதிகம் 129

தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் நிலை சொல்வதெவ்வாறே


உரை (செந்தில்வேல்):

தூக்கம் என்பதை தவம் அல்லது தியானம் என என்ற பொருள் கொள்ளலாம். அவ்வாறு ஆழ்ந்த தவத்தினால் முதல் படியான சிவலோகம் என்கிற, அமைதியே பொருளான இடத்தை தன் மனதுள்ளே காணலாம். சிவலோகம் மட்டும் அல்லாமல் உண்மையை அடையும் யோகத்தையும் , உண்மையான இன்பத்தையும் தனக்குள்ளேயே காணலாம்.


உரை(ஜோ விநிப்றேத்) உரைப்பார் - காத்திருக்கவும்

உரை( சௌமியா) உரைப்பார் - காத்திருக்கவும்


உரை (அரவிந்தன்):

சிறு குறிப்பு:

தூங்கிக்கண்டார் - தியானத்தினால் காண்பது / கனவில் காண்பது / புறத்தில் இருந்து விலகிநின்று காண்பது / இறந்தபின் காண்பது

சிவலோகம் - கைலாயம் / வெற்றிடம் / நல்இருள் / இமாலையம்/ ஒலி

தம்முள்ளே - மனதினுள்ளே / மனிதனின் உள்ளே

விளக்க உரை :

சிறந்த தியானத்தால் சிவலோகத்தை மனதினுள்ளே காணமுடியும்

சிறந்த தியானத்தால் சிவயோகமும் மனதினுள்ளே காணமுடியும்

சிறந்த தியானத்தால் ஷிவபோகமும் மனதினுள்ளே காணமுடியும்

சிறந்த தியானத்தில் இருப்பவர்களின் நிலை சொற்களால் உரைக்க இயலாது.



Thursday 7 October 2010

பதிகம் 114

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே

Wednesday 6 October 2010

பதிகம் 113

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே






உரை (அரவிந்தன்) (Aravinthan's Interpretation):

தண் -ஆட்சேப சமா தானங்கள் (Pros and cons)
விண் - மேலுலகம். விண்மீதிருப்பாய் ,Heaven,Sky,the world above.
உண் - உண்டாதல் - To Create
களிம்பறு -Man of unimpeachable character; குற்றமற்றவன்

விண்ணில் இருந்து இவ்வுலகிக்கு அவதரிதோம் நாம் , நம் வினைக்கு சமம்மாக நல்வினையும் கொண்டோம்.
முக்தி அடைய தடையாக உள்ளது நமது என்னங்கலகிய ஆட்சேப சமா தானங்கள். இவற்றை வைத்தே நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறார் இறைவன்.
இபேரை அடைந்தவர்கள் அனந்த கண்ணீரினால் இவர்களின் வினையினை அறுப்பார் /நீக்குவார் இறைவன்.

We are born from Heaven with karma equivalent to our goodness,
"Pros and Cons" in us is the closed door that we have, which we need to eliminate to attain siddis,
With His blessings he melts us and gives the epitome of blessings,
The moist eyes that we have would show that he has removed impurities and made us an Man of unimpeachable character.